பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் இருந்து தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிரப்புவதற்காக தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை கட்சியின் பொதுச் செயலாளரிடம் தம்மிக்க பெரேரா பெற்றுக்கொண்டார்.