தற்கொலை செய்த இராணுவவீரர் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவரில்லை: மறுக்கின்றார் சுமந்திரன் MP!

Date:

வெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மே 9ம் திகதி சம்பவங்களிற்கு பின்னர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இராணுவபாதுகாப்பு வழங்கப்பட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நான் இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரி லெப். கேர்ணல் குணதிலகவை தொடர்புகொண்டு எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்தேன் அதனை தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் இந்த பிரிவினர் எனதுவீட்டிற்கு அருகிலிருந்து வெளியேறி தொலைவில் நிலை கொண்டுள்ளதை பார்த்தேன் எனதெரிவித்துள்ள சுமந்திரன் வீதிகளில் வழமையாக இராணுவத்தினர் காணப்படுவதால் இவர்களை எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இந்த பிரிவை சேர்ந்த ஒரு இராணுவவீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற துரதிஸ்டவசமான செய்தியை கேள்விப்பட்டேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...