தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன ஐந்து வயது குழந்தையை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
42 வயதான தாய் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வியாழன் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.