பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பாடசாலை பஸ் சேவையை நாளை (15) முதல் ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக பாடசாலை பஸ் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த பாடசாலை பஸ் சேவைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து கெஸ்பேவ, கோட்டை, மொரட்டுவ, தொட்டலங்க, நாரஹேன்பிட்டி, பதுரலிய, மத்துகம, ஹொரணை, களுத்துறை, அளுத்கம, ஹோமாகம, தெல்கந்த, நாரஹேன்பிட்டி, ஹோமாகம, மஹாலேவ, வீதியால் இயங்கும்.
மேலும், சாதாரண பஸ் கட்டணத்தின் கீழ் இயங்கும் புதிய பாடசாலை பஸ் சேவைகளுக்கு தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படும் என பொது அத்தியட்சகர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவவின் மேற்பார்வையின் கீழ் இந்த புதிய பாடசாலை பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.