பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
சிற்றுண்டிச்சாலையில் குறைந்தபட்ச விலையில் உணவுப் பார்சல் வழங்க 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய இந்த விடயம் குறித்து அவைக் குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.