சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில் பிரதமர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும், பதற்றமின்றி நிதானமாக செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.