புத்தளம் வணாத்தவில்லு வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு 3 வருடங்கள் சிறையில் இருந்த இருவருக்கு பிணை!

Date:

புத்தளம் வணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக சிறைப்படுத்த பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த இருவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் இடம் பெற்றுவருகின்ற நிலையில் சந்தேகநபர்களான முபீஸ் மற்றும் ஹமாஸ் ஆகியோர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், முஹம்மது சஜாத் மற்றும் மதீஹா அப்பாஸ் ஆகியோர் தமது காட்ச்சிக்காரர்களுக்கு பிணை கோரும் பத்திரத்தினி சமர்பித்திருந்தனர்.

இதனை பரிசீலனை செய்வதற்கன காலத்தை மூவரடங்கிய நீதவான்கள் வேண்டியிருந்தனர். இதனடிப்படையிலான தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

இன்று மன்றில் மகர சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்ரகளுக்கான பிணை வழங்கப்பட்டது.மேற்படி சந்தேக நபர்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்கப் பிணனையும், தலா இருபது லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பினைகளும், அத்துடன் மாதத்தில் முதல் சனிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்களத்திலும் ஏனைய இரு சனிக்கிழமை புத்தளம் காவல் துறையிலும் கையொப்பம் இடுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மீண்டும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இடம்பெறும்.

(தகவல் : இர்ஷாத் ரஹமதுல்லா-புத்தளம்)

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...