கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகம எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி பின்னர் கைது செய்யப்பட்டார்.