அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு குழந்தைகளை அனுமதிப்பது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2023 ஆம் ஆண்டு முதல் குறித்த சுற்றறிக்கையானது அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.