முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக அழையுங்கள்!

Date:

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.
முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், தொலைபேசியில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுலதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...