யாழ்ப்பாணத்தில் 630 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!

Date:

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அதனை களஞ்சியப்படுத்திய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...