யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
கையிருப்பில் உள்ள உரங்களை விவசாய மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.