எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை மக்கள் 2ஆவது நாளாக போராட்டம்: நாடு எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல் கப்பல் வந்தடைந்தது!

Date:

எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக இன்று (24) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்களாக பஞ்சிகாவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால் மக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் நேற்று (23) காலை எரிபொருளுக்காக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் கப்பல் இலங்கைக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்த பெட்ரோல் கப்பல் பல நாட்களாக நாட்டில் வரிசைகளில் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் கையிருப்பு விநியோகம் செய்யப்பட்ட போதிலும் சில பகுதிகளுக்கு இதுவரை பெற்றோல் கிடைக்கவில்லை.

பெறப்பட்ட குறைந்த அளவு பெற்றோல் கூட வரிசையில் நிற்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...