ஜூலை முதல் வாரத்தில் இருந்து எரிபொருளுக்கான ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய எந்தவொரு நபரும் குறிப்பிட்ட அளவு எரிபொருளைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், மாதாந்தம் தேவையான எரிபொருளில் 60 வீதத்தை ஒருவர் பதிவு செய்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் மீதம் உள்ள எரிபொருளை வேறு நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ரேஷன் முறை சீர்செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.