மாத்தளையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று (09) இடம்பெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி, மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்சல் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான கணனிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது

கௌடுபெல்ல மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணனி, உதைபந்தாட்ட, கிரிக்கெட் உபகரணங்கள் என்பன பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...