இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 குறைந்து ரூ.38 ஆக இருக்கும்.

இந்த விலை அதிகரிப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பேருந்துக் கட்டணக் குறைப்பு வழங்கப்படாவிட்டால் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 1955 இலக்கத்திற்கு அழைப்பெடுக்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், இந்த பஸ் கட்டண வசூலை கண்காணிக்க,  அதிகாரிகள் முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...