ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பில் பல்வேறு ஊடகங்களில் கடமையாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (11) மாலை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்ததுடன் ” ஊடக சுதந்திரத்தை பறிக்காதே!”, “ஊடகத்தையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைக்காதே!”, ” ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க நினைக்காதே!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...