ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத மற்றும் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் ஆரம்பம்!

Date:

நேற்றிரவு (08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை நிறைவடைந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சேபால லியனகே தெரிவித்தார்.

தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் வேலை நிறுத்தம் தொடங்கியது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததாகவும்  சேபால லியனகே கூறுகிறார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...