எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்!

Date:

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிற்கு வந்துள்ள 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உர விநியோகம் இன்று ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு உரப் பொதி விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட உரப் பொதியானது 40,000 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் மூலம் இலங்கைக்கு 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 40,000 மெற்றிக் தொன் உரம் கடந்த சனிக்கிழமை ஜூலை 9ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இவை நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குப் பயன்படுகிறது.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தேயிலை பயிர்ச்செய்கைக்காக எஞ்சிய உரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...