எரிபொருள் தீர்ந்ததால் கலவரம்: இராணுவ வீரரின் கை துண்டிப்பு!

Date:

எம்பிலிபிட்டிய 100 கட்டடை பகுதியில், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சண்டையின் போது பாதுகாப்பில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத் தினத்தன்று  காலை இந்த எரிவாயு நிலையத்தில் 92 ஒக்டேன் வகை பெற்றோல் பவுசர் ஒன்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரிசையில் நின்ற வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், மாலை மூன்று மணியளவில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக கூறியதையடுத்து வரிசையில் நின்றவர்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்கை உடைத்தனர்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்புக்கு இராணுவ வீரர்களும் இருந்துள்ளனர். அப்போது, இடம்பெற்ற கலவரத்தின் போது, ​​இராணுவ வீரரின் கை வெட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வரிசையில் இருந்த நபர் ஒருவர் தனது கையை வெட்டியதாகவும் குறித்த இராணுவ வீரர் மருத்துவமனையில் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...