புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள் பணியிடங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பல அலுவலக ரயில்களும் உள்ளடங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.