கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கி விமானம் விபத்து!

Date:

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
330 ரக சரக்கு விமானம் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து நேற்று இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 11.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் சரியாக பிரேக் போடாமல் விமானத்தின் அருகில் நிறுத்தப்பட்டதால், விமானத்தின் என்ஜினுடன் கொள்கலன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த விமானத்தை மீட்கவோ அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவோ துருக்கி விமான அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...