காட்டு யானை மீது மோதி வாகன விபத்து: பிரபல சிங்கள நடிகர் உட்பட மூவர் காயம்

Date:

அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில் சிங்கள திரைப்பட நடிகரும், பிரபல அறிவிப்பாளருமான ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜாக்சன் அந்தோணி கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு  ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அநுராதபுரத்திற்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியுடன் பயணித்த சமன் ஆண்டனி மற்றும் ஐரேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் மொரகொட பிரதேசவாசிகள் மற்றும் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21)...

நபிகளாரின் விண்ணுலக பயணம் மி ஃராஜ் நினைவு தின நிகழ்ச்சி.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 17 சனிக்கிழமை இரவு...