கிளிநொச்சியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

Date:

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் ஊழியர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் நேற்று (22) மதியம் உணவு அருந்திவிட்டு கை கழுவும் போது நிலத்தில் பொருள் ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

அதனை எடுத்து நிலத்தில் குற்றிப் பார்த்தபோது வெடித்து சிதறியுள்ளது. இதன்போது குறித்த நபரின் கை சிதறி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Popular

More like this
Related

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...