ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக் காட்டியதால் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகவும், பயணச்சீட்டு ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதால் புகையிரத பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி ரயில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.