கொழும்பு, காலி முகத்திடலில் நேற்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றுகள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய பின்னர், அந்நகரில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இராணுவம் அருகிலுள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் கூடாரங்களை இடித்து, ஏராளமான போராட்டத் தலைவர்களை தடுத்து வைத்தது மற்றும் அப்பகுதியைத் தடுத்தது.
இந்த நிலையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்று ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.