‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!

Date:

கொழும்பு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கிராமம்’ போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அவசர சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்திருந்தது.

போராட்டக்காரர்களை அடித்து உதைப்பது சட்டவிரோதமானதும் ஜனநாயகமற்றதுமான செயல் என்பதால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...