ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

Date:

நேற்று (ஜூலை 23) மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையங்களில்  டிக்கெட் வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (ஜூலை 24) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அன்றிலிருந்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...