சமையல் எரிவாயு கொள்முதலுக்கு மின்கட்டணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் முறைமை!

Date:

உள்நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கு மின்சாரக் கட்டண பத்திரத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அதன்படி, ஒருவர் எரிவாயுவைப் பெற விரும்பினால், எதிர்காலத்தில் அவரது வீட்டின் மின் கட்டணத்தை எரிவாயு விற்பனையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதன் மூலம் மின்கட்டணத்தை சமர்ப்பித்து, காஸ் வழங்கிய பின், காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டதாக பில்லில் முத்திரை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை கண்காணிக்க பொலிஸார் உதவியையும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு வரவுள்ளது.

தற்போது அதன் விநியோகத்தை வரும் 7ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ள 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவின் முதல் பாகம் நாடு முழுவதும் வந்து சேரவுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...