ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகத்திற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் பாராளுமன்றம் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்காது என்றும் தாம் நம்புவதாகவும் கூறினார்.
பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம் ஆனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் ஒற்றுமையாக செயல்பட முடியும் என்றார்.