ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அந்த கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த 9ஆம் திகதி அறிவித்திருந்தார்.