கோட்டாபய இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை: இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ  மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியது தொடர்பாக, இந்தியா அதற்கு ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் தவறானவை.

ஜனநாயக அமைப்புகள் மற்றும் விழுமியங்கள், ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் போது இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அது மேலும் கூறுகிறது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...