ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நிதி அமைச்சில் நேற்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப மனித உரிமைகளையும் உரிய செயற்பாடுகளையும் மதித்து, அமைதியான, ஜனநாயக மற்றும் திறந்த வௌி செயற்பாடுகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...