நாட்டில் அமைதியை நிலை நாட்ட பொலிஸால் மற்றும் ஆயுதப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போ, அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்களை அழிக்கக்கூடாது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் படைகளும் பொலிஸ்துறையும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டன. குறிப்பாக இன்று சபாநாயகர் எங்களிடம் கூறினார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி பதவி விலகிய நிலையில், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடினோம் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.