நாட்டில் நெருக்கடி தொடர்ந்தால் இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள்: செல்வம் எம்.பி

Date:

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில புலம் பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் இதற்காக நாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியா தலையிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

அவ்வாறு  பிரச்சினைகளை தொடருமென்றால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று ...

அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள்...

துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப்...