நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாட்டு மக்கள் ஆதரவளியுங்கள்: பதில் ஜனாதிபதி ரணில் விசேட அறிக்கை

Date:

நாட்டின் நிலைமையை வழமைக்கு கொண்டு வர பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு சபையின் தலைவர், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று இன்று பிரதமர் அலுவலகம் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய  மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக கோரி கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...