‘பதில் ஜனாதிபதியின் உத்தரவை பின்பற்ற வேண்டாம்’: சரத் பொன்சேகா வேண்டுகோள்

Date:

சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, பதில் ஜனாதிபதியாக தம்மை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளை பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு ஆயுதப்படையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்களிடையே வதந்தி பரவி வருவதாகவும், ஆயுதப்படையினருக்கும், நாட்டின் சாதாரண நிராயுதபாணியான பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில், சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்த்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தானும் போராட்ட களத்தில் நின்று மக்களுடன் முன்னணியில் நின்று மக்கள் போராட்ட வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக அவர் தனது குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...