பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

Date:

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் பங்கேற்ற 100வது டெஸ்ட் போட்டி சிறப்பம்சமாகும்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 378 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 08 விக்கட்டுக்களை இழந்து 360 ஓட்டங்களையும் பெற்று இன்னிங்ஸ் இடைநிறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 231 ஓட்டங்கள் குவித்து 506 ஓட்டங்கள்  இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்சில் 261 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மேலும், பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய 117 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மெண்டிஸ் 101 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...