பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கங்காராம விகாரை கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் வேண்டுகோளின் பேரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு கடந்த 1 ஆம் திகதியன்று கொழும்பு 2 கங்காராம விகாரையில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் பல பகுதிகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.