புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுக்களுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கு பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு பதிலாக சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார்.
இதுவரையில் பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க, விஜேதாச ராஜபக்ஸ, காஞ்சன விஜேசேகர ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஏனைய அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னும் சில அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் அல்லது அரச அமைச்சுப் பதவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.