மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும்!

Date:

ஜூலை 10 ஆம் திகதி காலை முதல் மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் பேரூந்துகள் இடையூறு காரணமாக மலையக புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதங்களில் அதிகளவான பயணிகள் பயணிக்க வந்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் இ.போ.ச மற்றும் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பயணிக்கும் பல பஸ்கள் இன்று இயங்காததால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிப்போ ஊழியர்கள் நேற்று (ஜூலை 9) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று பணிக்கு வந்த சில சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், சில பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் இ.போ.ச டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...