புதிய அரசாங்கம் அமையும் வரை போராட்டம் தொடர வேண்டும்: ஜே.வி.பி

Date:

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தை கைவிடக் கூடாது என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
அதேநேரம், புதிய அரசாணையுடன் புதிய ஆட்சி அமைக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது மாத்திரமல்ல, 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் தீர்வு கிடைக்காது என தெரிவித்த அவர், இந்த நெருக்கடி நிலையை தீர்க்க புதிய அரசாணையுடன் கூடிய புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

‘சில தரப்பினர் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். தற்போதைய நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமித்து நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்.

இதுபோன்ற தந்திரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம். எம்மால் சாதிக்க முடியும்.

புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே இறுதி வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதும் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் தற்போதைய பாராளுமன்றத்தின் மூலம் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். குறுகிய கால அவகாசம் மற்றும் அதன் முதல் பணி தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...