தற்போது மாலைத்தீவில் இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 புதன்கிழமை மாலை சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடபில் இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று பிரத்தியேகமாக பேசுகையிலேயே மாலைத்தீவு வட்டாரங்கள், இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கோட்டாபய சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்ததை உறுதி செய்து கொண்டு இன்று மாலை வேலனா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட உள்ளதாகவும், அவர் SQ437 என்ற விமானம் மூலம் புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகம் குழப்பமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
இதற்கிடையில், மாலைத்தீவில் உள்ள ஜனாதிபதி ஜெட்டியில் இன்று மாலை மாலைத்தீவு மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.