வஜிர அபேவர்தன அமெரிக்க தூதுவரை சந்தித்தார்: சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து பேச்சு!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் வருடத்தில் சாதகமான பலன் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வஜிர அபிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்தும் தூதுவருக்கு   வஜிர அபேவர்தன விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...