இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

Date:

‘மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவில் தலைமைப் பொறுப்பிற்கு நீங்கள் நியமிக்கப்பட்டது, உங்கள் திறமை மற்றும் அரசியல் சாமர்த்தியத்தின் மீது அரசும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்’ என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார்

இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்.

அவரது பதவியேற்புக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் நட்புறவுகளை எடுத்துரைத்தார்.

இந்தியாவும், இலங்கையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இருந்து மக்கள் தொடர்பு கொண்ட அன்பான மற்றும் நீண்டகால உறவுகளை அனுபவித்து வருகின்றன.

மேலும் பல துறைகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் குறித்த கடிதத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...