‘கொமன்வெல்த் போட்டியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எனது பெயரை நீக்கினார்’ : ஸ்குவாஷ் வீராங்கனைபாத்திமா சலிஹா

Date:

பொதுநலவாய விளையாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை தாம் இழந்துவிட்டதாகவும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர் நாயகம் தனது பெயரை இல்லாமலாக்கினார்கள் என பாத்திமா சலிஹா பெதும் இஸ்ஸடீன் கூறினார்.

அவர் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் தளத்தில் தெரிவித்தார்.

பாத்திமா சலிஹா  குழு நிலைப் போட்டியான ஸ்குவாஷ்  (SQUASH) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இலங்கை அணி வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன், பெண்கள் அணியில் பாத்திமா சலிஹா பெதும் இஸ்ஸடீன், சமீரா ருக்ஷானா டீன் ஆகிய இரண்டு முஸ்லிம் வீராங்கனைகள் இடம்பிடித்தருந்தனர்

அவர் 2019 ஆம் ஆண்டிற்கான தேசியப் போட்டிகளையும் வென்றுள்ளதுடன் இலங்கையின் மகளிர் ஸ்குவாஷ் தேசிய சாம்பியனாக முடிசூட்டப்பட்டார்.

இந்நிலையில், பொதுநலவாய விளையாட்டு 2022 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை தாம் இழந்துவிட்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர் நாயகம் தனது பெயரை துண்டித்ததாக அவர் கூறினார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் தான் தலையிடவில்லை என்றும், அனைத்து தேர்வுகளும் தேசிய தேர்வுக் குழுவால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேசிய விளையாட்டு கவுன்சிலால் இறுதி செய்யப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...