ஊடகவியலாளர்கள், கடமைகளை சுதந்திரமாகச் செய்ய ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்!

Date:

அண்மையில், காலி முகத்திடலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியமை, தாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் மீடியா போரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில், ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கடமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டதுடன் சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரும் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செயற்பாட்டை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிப்பதாக போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நடுநிலையான விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு தடைகளும் இல்லாமல் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக்கொள்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...