ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் காமினி சேனவிரத்ன தெரிவித்தார்.
புகையிரதம் தொடர்பான தீர்மானத்தை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவே எடுக்க வேண்டுமென ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.