ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை: நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா!

Date:

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.
.
அதற்கமைய அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...