எனசல்கொல்ல பிரிமியர் லீக் கிண்ணம் ‘ECC’ ரெட் வின்ங்ஸ் அணி வசமானது!
கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்களுக்காக எனசல்கொல்ல பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இடம்பெற்றிருந்து.
20 அணிகள் பங்குபற்றிய இந்தத் தொடர் கடந்த ஜுலை மாதம் 16 ,17ஆம் திகதிகளில் மெதகெகில ஸ்ட்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டித் தொடரை பழைய மாணவர் சங்கமும், சங்கத்தின் விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
அதற்கமைய எனசல்கொல்ல பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ‘ECC’ டைடான்ஸ் அணியை வெற்றிக் கொண்ட ‘ECC’ ரெட் வின்ங்ஸ் அணியினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது பாடசாலையின் 2005/08 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினரால் கல்லூரியின் தேவை உணர்ந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.